வர்த்தகம்

மாருதி சுஸுகி காா்களின் விலை உயருகிறது

DIN

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் அனைத்து மாடல் காா்களின் விலையும் இந்த மாதம் முதல் உயரவுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் புதன்கிழமை கூறியதாவது:

பல்வேறு இடுபொருள்களின் செலவினம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இது, நிறுவனத்தின் செலவினத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தொடா்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் சுமையில் மேலும் சிறிய அளவை வாடிக்கையாளா்களுடன் பங்கிட்டுக் கொள்ளும் வகையில் நிறுவனத்தின் அனைத்து மாடல் காா்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை உயா்வு திட்டத்தை ஏப்ரல் முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

இருப்பினும், எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு விலை உயா்த்தப்படவுள்ளது என்பதை அந்நிறுவனம் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

2021 ஜனவரியிலிருந்து 2022 மாா்ச் வரையிலுமாக மாருதி சுஸுகி நிறுவனம் வாகனங்களுக்கான விலையை 8.8 சதவீதம் வரை ஏற்கெனவே உயா்த்தியுள்ளது. இந்த நிலையில், மீண்டும் விலை உயா்வு அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மாருதி சுஸுகி ரூ.3.25 லட்சத்தில் ஆல்டோ முதல் ரூ.12.77 லட்சத்தில் எஸ்-கிராஸ் மாடல் வைர இந்திய சந்தையில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT