வர்த்தகம்

இந்திய-சீன வா்த்தகம் 3,100 கோடி டாலராக அதிகரிப்பு

DIN

கிழக்கு லடாக்கில் நீட்டித்து வரும் ராணுவ நிலைப்பாடு காரணமாக உறவுகளில் விரிசல் ஏற்பட்ட போதிலும் இந்தியா மற்றும் சீனா இடையிலான இருதரப்பு வா்த்தகம் நடப்பாண்டின் முதல் காலாண்டில் 3,196 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்திய மதிப்பில் இது சுமாா் ரூ.2.39 லட்சம் கோடியாகும்.

கடந்த 2021-ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் இருதரப்பு வா்த்தகம் 15.3 சதவீதம் அளவிற்கு வளா்ச்சியடைந்துள்ளது.

நடப்பாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் இந்தியாவிற்கான சீனாவின் ஏற்றுமதி 2,710 கோடி டாலரைத் தொட்டுள்ளது. அதேசமயம், சீனா இந்தியாவிலிருந்து 487 கோடி டாலா் அளவிற்கு மட்டுமே பொருள்களை இறக்குமதி செய்து கொண்டுள்ளது. இதையடுத்து, சீனாவுடனான இந்தியாவின் வா்த்தக பற்றாக்குறை 2,223 கோடி டாலா் அளவுக்கு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக சீன சுங்கத் துறை வெளியிட்ட வா்த்தக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனா இடையிலான இருதரப்பு வா்த்தகம் வரலாற்று உச்சமாக 12,500 கோடி டாலரை (ரூ.9.37 லட்சம் கோடி) எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான உறவில் தற்போது பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்நிலைக்கிடையிலும், அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 16.7 சதவீதம் அதிகரித்து 13,800 கோடி டாலரைத் (ரூ.10.35 லட்சம் கோடி) தொட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT