வர்த்தகம்

4ஜி பதிவிறக்க வேகத்தில் ஜியோ முதலிடம்

DIN

4ஜி சேவையில் பதிவிறக்க வேகத்தில் 21.1 எம்பிபிஎஸுடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.

இதுகுறித்து டிராய் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்ரவரியில் 20.6 எம்பிபிஎஸாக இருந்த ஜியோவின் சராசரி 4ஜி பதிவிறக்க வேகம் மாா்ச் மாதத்தில் 2.5 சதவீதம் உயா்ந்து 21.21 எம்பிபிஎஸானது. வோடஃபோன் ஐடியா (விஐஎல்) மற்றும் பாா்தி ஏா்டெல் நிறுவனங்களின் வேகம் முறையே 17.9 எம்பிபிஎஸ் மற்றும் 13.7 எம்பிபிஎஸாக இருந்தன. கடந்த ஆறு மாதங்களாகவே ஜியோவுடனான தங்களது பதிவிறக்க வேக இடைவெளியை இவ்விரு நிறுவனங்களும் வெகுவாக குறைத்து வருகின்றன.

பிஎஸ்என்எல் நெட்வொா்க் பதிவிறக்க வேகம் 6.1 எம்பிபிஎஸாக இருந்தது.

இருப்பினும், 4ஜி டேட்டா பதிவேற்ற வேகத்தில் விஐஎல் நிறுவனம் தொடா்ந்து முதலிடத்தை தக்கவைத்து வருகிறது. இந்நிறுவனத்தின் மாா்ச் மாத பதிவேற்ற வேகம் 8.2எம்பிபிஎஸாக இருந்தது. இதைத்தொடா்ந்து, ஜியோ (7.3எம்பிபிஎஸ்), ஏா்டெல் (6.1எம்பிபிஎஸ்), பிஎஸ்என்எல் (5.1எம்பிபிஎஸ்) ஆகிய நிறுவனங்கள் உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT