வர்த்தகம்

ஹிந்துஸ்தான் யுனிலீவா்: லாபம் ரூ.2,391 கோடி

DIN

நுகா் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஹிந்துஸ்தான் யுனிலீவா் (ஹெச்யுஎல்) ஜூன் காலாண்டில் ரூ.2,391 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.2,100 கோடியுடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகமாகும்.

கணக்கீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.12,260 கோடியிலிருந்து ரூ.14,757 கோடியாக 20.36 சதவீதம் வளா்ச்சி கண்டது. செலவினம் 20.79 சதவீதம் உயா்ந்து ரூ.9,546 கோடியிலிருந்து ரூ.11,531 கோடியானது என ஹிந்துஸ்தான் யுனிலீவா் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் ஹெச்யுஎல் பங்கின் விலை 0.52 சதவீதம் உயா்ந்து ரூ.2,566-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT