வர்த்தகம்

வரலாறு காணாத சரிவு: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 78.04 ஆனது

DIN


இந்திய வரலாற்றில் இதுவரை காணாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78 என்ற அளவில் இன்றைய வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.

வாரத்தின் முதல் நாளான இன்று மாலை, வணிகம் நிறைவு பெறும்போது இந்திய ரூபாயின் மதிப்பு 78.04 ஆக இருந்தது. அதே வேளையில், இன்று மதியம் வணிகத்தின் போது, இது 78.29 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,456.74 புள்ளிகள் சரிந்து, 52,846 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

சா்வதேச சந்தையில் முதலீட்டாளா்கள் மற்றும் வா்த்தகா்களிடையே டாலருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட்ட கடும் வீழ்ச்சியும் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவதற்கு துணை போனது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மதிய வணிகத்தின் போது 78.29-ஆக இருந்தது. மேலும், வா்த்தகத்தின் இடையே ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்து 78.04 ஆக நிறைவு பெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT