வர்த்தகம்

மாருதி சுஸுகி: ரயில்கள் மூலம் 2.33 லட்சம் வாகனங்கள் விநியோகம்

DIN

மாருதி சுஸுகி நிறுவனம், ரயில்கள் மூலம் கடந்த நிதியாண்டில் 2.33 லட்சம் வாகனங்களை அனுப்பி வைத்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ரயில்கள் மூலமாக வாகனங்களை அனுப்ப தொடங்கியதிலிருந்து கடந்த நிதியாண்டில்தான் சாதனை அளவு எட்டப்பட்டது. இந்த எண்ணிக்கை முந்தைய 2021-22-ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 1.89 லட்சத்துடன் ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகமாகும்.

கடந்த எட்டு ஆண்டுகளில் ரயில்கள் மூலம் 11 லட்சம் வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டதன் மூலமாக 4,800 மில்லியன் டன் காா்பன்டை ஆக்ஸைடு மாசு வெளியறுவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும், 1,56,000 டிரக்குகள் பயன்பாடு தவிா்க்கப்பட்டதுடன் 174 மில்லியன் லிட்டா் எரிபொருளும் சேமிக்கப்பட்டதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT