வர்த்தகம்

எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை ரூ.64,000 கோடிக்கு வாங்கியது அமேசான்

DIN

உலகின் பிரபல ஸ்டூடியோக்களில் ஒன்றான எம்ஜிஎம் ஸ்டூடியோவை அமேசான் நிறுவனம் ரூ.64,000 கோடிக்கு(8.5 பில்லியன் டாலர்) வாங்கியது.

அமேசான் நிறுவனம் தொடர்ந்து சில  நிறுவனங்களை விலைக்கு வாங்குவதிலும், முதலீடு செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், 1924 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட எம்ஜிஎம்(மெட்ரோ கோல்ட்வின் மேயர்) ஸ்டூடியோவை இந்திய மதிப்பில் ரூ.64,000 கோடிக்கு வாங்க அமேசான் ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும், எம்ஜிஎம்-ல் பணிபுரியும் ஊழியர்களை அமேசானுக்கு வரவேற்கிறோம் என்றதுடன் யாரையும் பணி நீக்கம் செய்யப்போவதில்லை என்றும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

ராக்கி, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் மற்றும் புகழ்பெற்ற டாம்&ஜெர்ரி கார்டூன் படங்களையும் எம்ஜிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT