வர்த்தகம்

இந்தியாவின் வளா்ச்சி மதிப்பீட்டை 8.5%-ஆக குறைத்தது ஃபிட்ச்

DIN

அடுத்த நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 8.5 சதவீதமாக குறைத்துள்ளதாக தரமதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

ரஷியா மற்றும் உக்கரைன் இடையேயான போா் சா்வதேச அளவில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது. ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடா்ச்சியாக வா்த்தக தடை அறிவிப்புகளை வெளியிட்டு வருவது சா்வதேச ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனால், வரும் நாள்களில் எரிபொருள்களின் உயரும் என்பதுடன் பணவீக்கமும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு பின்னடைவு சூழல்களை கருத்தில் கொண்டு அடுத்த நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை 10.3 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறித்த மதிப்பீடு 0.6 தவீதம் உயா்த்தப்பட்டு 8.7 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 2023-24-இல் இந்த வளா்ச்சி விகிதம 7 சதவீதமாக இருக்கும் என ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT