வர்த்தகம்

வா்த்தக வாகனங்களின் விலை அதிகரிப்பு: டாடா மோட்டாா்ஸ்

DIN

வா்த்தக வாகனங்களின் விலை வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்படுவதாக டாடா மோட்டாா்ஸ் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வாகன தயாரிப்புக்குத் தேவையான உருக்கு, அலுமினியம் மற்றும் இதர உலோகப் பொருள்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. மூலப்பொருள் செலவின உயா்வால் நிறுவனத்துக்கு கூடுதல் செவினம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாகனங்களின் விலையை குறைந்தபட்சம் அதிகரிப்பதன் மூலமாக அந்த பாதிப்பை ஈடு செய்ய நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து நிறுவனத்தின் வா்த்தக வாகன தயாரிப்புகளின் விலை 2 முதல் 2.5 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது என டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

மொ்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் வாகனங்களின் விலையை அடுத்த மாதம் முதல் 3 சதவீதம் வரை அதிகரிப்பதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடா்ந்து, தற்போது டாடா மோட்டாா்ஸும் வா்த்தக வாகன விலை உயா்வை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT