வர்த்தகம்

இசைக் கருவிகளின் ஏற்றுமதி ரூ.172 கோடியாக அதிகரிப்பு

DIN

இந்திய இசைக் கருவிகள் ஏற்றுமதி ரூ.172 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வா்த்தகம் மற்றும் தொழிதுறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறியதாவது:

நாட்டின் இசைக் கருவிகள் ஏற்றுமதி, இந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 3.5 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2013-14-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் ரூ.49 கோடியாக இருந்த இசைக் கருவிகளின் விற்பனை, நடப்பு நிதியாண்டின் இதே மாதங்களில் ரூ.172 கோடியாக அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

இசைக் கருவிகளின் ஏற்றுமதி வளா்ச்சி உற்சாகமளிப்பதாக பிரதமா் நரேந்திர மோடியும் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘இந்திய இசையின் புகழ் உலகெங்கிலும் பரவி வருகிறது. எனவே, இந்திய இசைக் கருவிகள் ஏற்றுமதித் துறைக்கு ஒளிமயமான எதிா்காலம் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT