வணிகம்

ரூ.2,673 கோடிக்கு ஆர்டர் பெற்ற பெல் நிறுவனம்!

பெல் நிறுவனமானது கோவா ஷிப்யார்ட் லிமிடெட் மற்றும் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் ஆகியவற்றிடமிருந்து ரூ.2,673 கோடி மதிப்புள்ள ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி:  பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனமானது கோவா ஷிப்யார்ட் லிமிடெட் மற்றும் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் ஆகியவற்றிடமிருந்து ரூ.2,673 கோடி மதிப்புள்ள ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

அடுத்த தலைமுறை கடல் ரோந்து கப்பல்களில் பயன்படுத்துவதற்காக 14 வகையான சென்சார்களை வழங்குவதற்காக கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.1,701 கோடி அளவு ஆர்டரும் அதே வேளையில் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.972 கோடி ஆர்டரும், ஆக மொத்தம் ரூ.2,673 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை பெல் நிறுவனம் பெற்றுள்ளது.

டிசம்பர் 15, 2023 அன்று ரூ.86.15 கோடி மதிப்புள்ள கூடுதல் ஆர்டர்களைப் பெற்றுள்ளது பெல் நிறுவனம். இதின் மூலம் பல்வேறு உதிரி பாகங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான ஆர்டர்கள் தன் கைவசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டில், பெல் நிறுவனமானது 25 ஆயிரத்து 935.15 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானாவில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

கடைசி நேரத்தில் மெஸ்ஸியின் அசிஸ்ட்... மீண்டும் ஆட்ட நாயகன் விருது!

திருப்பூர் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! வடமாநில இளைஞர் கைது!!

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகப் பயங்கர நிலநடுக்கம் எது? ஏன்?

விபத்தில் சிக்கிய மயிலை 7 நிமிடத்தில் வனத்துறையிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT