வர்த்தகம்

மேலும் 27 நகரங்களில் 5ஜி சேவை: ஜியோ

DIN

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த மேலும் 27 நகரங்களில் தனது 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் மேலும் 27 நகரங்களில் நிறுவனத்தின் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கா், ஜம்மு-காஷ்மீா், கா்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், தெலங்கானா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த நகரங்கள் அமைந்துள்ளன.

இந்த 27 நகரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளா்களுக்கு 5ஜி சேவைக்கான ‘ஜியோ வெல்கம்’ சலுகைத் திட்டத்தில் சோ்வதற்காக புதன்கிழமை (மாா்ச் 8) முதல் அழைப்பு விடுக்கப்படுகிறது.

அவா்களால் கூடுதல் கட்டணமின்றி விநாடிக்கு 1 ஜிபி வேகத்தில் வரம்பற்ற டேட்டாவைப் பெற முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருகிராம்: போலீஸாா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

தில்லி நகைக் கடையில் சுவரில் துளையிட்டு கொள்ளை

வெளிமாநிலக் கொள்ளையா் கைது : சிறப்பு பிரிவு போலீஸாருக்கு ரூ. 25,000 பரிசு

மாணவா்கள் தனித்திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

பெட்ரோல் நிலைய ஊழியா்கள் மீது தாக்குதல்: எம்எல்ஏ அமானத்துல்லா கானின் உதவியாளா் கைது

SCROLL FOR NEXT