வர்த்தகம்

25 சதவிகித பங்குடன் ஆப்பிள் இந்திய டேப்லெட் சந்தையில் முன்னிலை!

DIN

புதுதில்லி: 2023 மற்றும் டிசம்பர் காலாண்டில், டேப்லெட் பிசி சந்தையில், ஆப்பிள் நிறுவனம் அதன் ஏற்றுமதியில் சரிவு கண்ட போதிலும், 25 சதவிகித பங்களிப்புடன் முன்னிலை வகித்தது.

2023ல் 23 சதவிகித சந்தைப் பங்குடன் சாம்சங் இரண்டாவது இடத்திலும், ஆப்பிள் டேப்லெட் 25 சதவிகித சந்தைப் பங்குடன் முன்னிலை வகித்தது. அதைத் தொடர்ந்து சாம்சங் 23 சதவிகிதத்தில் உள்ளது என்று சைபர்மீடியா ஆராய்ச்சி இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆப்பிள் டேப்லெட் பிசி ஏற்றுமதியானது ஆண்டுக்கு ஆண்டு 17 சதவிகிதம் என்ற அடிப்படையில் குறைந்துள்ளது.

லெனோவா டிசம்பர் காலாண்டில் 24 சதவிகித சந்தைப் பங்குடன் இரண்டாவது இடத்தைப் பிடித்த நிலையில் அதன் ஏற்றுமதி 3 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த நிலையில் சாம்சங் டேப்லெட் பிசி ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 36 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

5ஜி டேப்லெட்டுகளுக்கான வலுவான தேவையால் உந்தப்பட்டதால் 2023ஆம் ஆண்டு அதன் நான்காவது காலாண்டில் 21 சதவிகிதம் வளர்ச்சி கண்டது. அதே வேளையில் அதன் ஏற்றுமதி 43 சதவிகிதம் அதிகரித்தது.

இந்த நிலையிலும் வைஃபை டேப்லெட்டுகளும் சிறப்பாக செயல்பட்டன. இது 13 சதவிகிதம் அதிகரிப்பைப் பதிவு செய்து அதன் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 52 சதவிகிதம் அதிகரித்தது. பிரீமியம் டேப்லெட் பிரிவில் ரூ.20,000 முதல் 30,000 வரையிலான டேப்லெட் 95 சதவிகிதம் சிறப்பாக விற்பனையானது.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மாறுபட்ட தயாரிப்பு சலுகைகள் மற்றும் வளர்ந்து வரும் நுகர்வோர் விருப்பங்கள் போன்ற காரணிகளால் டேப்லெட் சந்தை 2024ஆம் ஆண்டில் 5 முதல் 10 சதவிகித நிலையான வளர்ச்சிக்கு தயாராக இருந்தது என்று சைபர் மீடியா ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா: இன்று தொடக்கம்

டெங்கு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

SCROLL FOR NEXT