முகப்பு
சென்னை

100 சதவீத இருக்கைகளுக்கு பரிந்துரைக்கவில்லை: மருத்துவக் குழு நிபுணர்

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளிக்க பரிந்துரைக்கவில்லை என கரோனா தடுப்பு மருத்துவக் குழு நிபுணர் குகானந்தம் கூறினார்.

Updated On : 7 ஜனவரி 2021, 4:43 am IST
பகிர்:


சென்னை:  தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளிக்க பரிந்துரைக்கவில்லை என கரோனா தடுப்பு மருத்துவக் குழு நிபுணர் குகானந்தம் கூறினார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறியது:  திரையரங்குகளின் வடிவமைப்பின்படி வெளி காற்று உள்ளே வராதபடியும், உள்காற்று வெளியே செல்லாதபடி என ஜன்னல்கள் ஏதுமின்றி இருக்கும். குளிர்சாதன வசதிக்காக வடிவமைப்பு இருப்பதால், சமூக இடைவெளியின்றி, அனைவரும் ஒன்றாக அமரும்போது, ஒருவருக்கு அறிகுறியற்ற முதல்நிலை தொற்று இருந்தாலும், மற்றவர்களுக்கு எளிதில் பரவும். எனவே, 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே நாங்கள் பரிந்துரை அளித்தோம். 100 சதவீத இருக்கைகளுக்குப் பரிந்துரைக்கவில்லை. 
 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கம் செயல்பட்டபோது, மக்கள் எப்படி ஆர்வம் செலுத்தவில்லையோ அதேபோன்று தற்போதும் திரையரங்கம் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.