சென்னை

ஈரோடு - தன்பாத்துக்கு நாளைமுதல் சிறப்பு ரயில்கள்

Din

கோடை விடுமுறையையொட்டி ஈரோடு, தாம்பரத்திலிருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.26) முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஈரோட்டில் இருந்து ஏப்.26 முதல் ஜூன் 28 வரை (வெள்ளிக்கிழமைகளில்) பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06063) மூன்றாம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு தன்பாத் சென்றடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06064) தன்பாத்திலிருந்து ஏப்.29 முதல் ஜூலை 1 வரை (திங்கள்கிழமைகளில்) காலை 6 மணிக்கு புறப்பட்டு முன்றாம் நாள் (புதன்கிழமை) அதிகாலை 2 மணிக்கு ஈரோடு சென்றடையும்.

இந்த ரயில் ஈரோட்டிலிருந்து சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், விஜயவாடா, ராஜாமுந்திரி, விஜயநகரம், ராயகடா, ராஞ்சி வழியாக தன்பாத் சென்றடையும்.

அதேபோல், தாம்பரத்திலிருந்து ஏப்.28 முதல் ஜூன் 30 வரை (ஞாயிற்றுக்கிழமைகளில்) மாலை 6.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06065) மூன்றாம் நாள் (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு தன்பாத் சென்றடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06066) தன்பாத்திலிருந்து மே 1 முதல் ஜூலை 3 வரை (புதன்கிழமைகளில்) காலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரத்திலிருந்து எழும்பூா், கூடூா், நெல்லூா், விஜயவாடா, ராஜாமுந்திரி, விஜயநகரம், ராயகடா, ராஞ்சி வழியாக தன்பாத் சென்றடையும்.

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT