சினிமா

வில்லன் ஆகிறார் ஸ்ரீகாந்த்!

சரத்குமார் நடித்த "வைத்தீஸ்வரன்' படத்தை இயக்கிய ஆர்.கே.வித்யாதரன் இயக்கியுள்ள புதிய படம் "ரசிக்கும் சீமானே'. இதில் ஸ்ரீகாந்த் முதல்முறையாக வில்லனாக நடித்திருக்கிறார். நவ்யா நாயர் முக்கிய வேடத்தில் நடி

தினமணி

சரத்குமார் நடித்த "வைத்தீஸ்வரன்' படத்தை இயக்கிய ஆர்.கே.வித்யாதரன் இயக்கியுள்ள புதிய படம் "ரசிக்கும் சீமானே'. இதில் ஸ்ரீகாந்த் முதல்முறையாக வில்லனாக நடித்திருக்கிறார். நவ்யா நாயர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். படம் குறித்து இயக்குநர் கூறியதாவது:

  இந்தப் படத்துக்கு முதலில் "எட்டப்பன்' என்ற பெயரை வைத்திருந்தோம். அதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வரவே, பெயரை "ரசிக்கும் சீமானே' என மாற்றியுள்ளோம். இதில் ஸ்ரீகாந்த் இதுவரை யாரும் நடித்திராத அளவுக்கு வித்தியாசமான "ஆன்டி-ஹீரோ'வாக நடித்திருக்கிறார். நகரில் வாழும் பெரிய மனிதர்களின் பலவீனங்களை அறிந்து அவர்களை "ப்ளாக்மெயில்' செய்வதுதான் அவருடைய வேலை. அவருடைய வாழ்க்கையில் நவ்யா நாயர் குறுக்கிட்ட பிறகு என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறோம். இதில் ஸ்ரீகாந்துக்குத் "தொழில்' கற்றுத்தரும் தாதா வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட்டன; ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

334 கல்லூரி மாணவா்களுக்கு உயா்கல்வி உதவித்தொகை: ராஜேஸ்குமாா் எம்.பி. வழங்கினாா்

காணும் பொங்கல்: கிராமங்களில் விளையாட்டுப் போட்டி

பள்ளிபாளையத்தில் எம்.ஜி.ஆா் பிறந்த நாள் விழா

தினமணி முகவா் பீ.ஏ.சித்திக் காலமானாா்

வெளிநாடுகளுக்கு செல்லும் பூஜைப் பொருள்கள்...

SCROLL FOR NEXT