சினிமா

வீரசேகரன்

எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் "வீரசேகரன்'. பல முன்னணி இயக்குநர்களிடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த நவி.சதிசுகுமார் கதை, திரைக்கதை, வசனம் எஎழுதி இயக்குகிறார். "காதல்', "வெய

தினமணி

எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் "வீரசேகரன்'. பல முன்னணி இயக்குநர்களிடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த நவி.சதிசுகுமார் கதை, திரைக்கதை, வசனம் எஎழுதி இயக்குகிறார்.

"காதல்', "வெயில்', "பூ' உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குநராக பணியாற்றிய வீரசமர் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகன் ஆகிறார். "மைனா' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் அமலா பால் கதாநாயகியாக நடிக்கிறார். பிராதப் போத்தன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ஆர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார்கள்.

கதை குறித்து இயக்குநரிடம் கேட்ட போது:

நட்பை கருவாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் இருந்து சென்னை வந்தவனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களையும், ஏமாற்றங்களையும் சுவாரஸ்யமாகச் சொல்லுவதுதான் கதை என்றார் நவி.சதிசுகுமார்.

ஒளிப்பதிவு } எஸ்.வி.எழில்செல்வன். இசை } சாஜன் மாதவ். சண்டைப் பயிற்சி } நந்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை பரணி தீபம் ஏற்பட்டது!

காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த தாழ்வு மண்டலம்..!

தொடர் கனமழை... இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தொடர் மழை... விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கவலைப்படாதவர்கள் கடக ராசியினர்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT