பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வரும் பாலிமர் தொலைக்காட்சி 'அமுதசுரபி' என்ற புதிய தொடரை ஒளிபரப்புகிறது.
இதில் சங்கீதா கதாநாயகியாக நடிக்கிறார். 'மர்மதேசம்', 'சிதம்பர ரகசியம்' போன்ற பிரபல தொடர்களை இயக்கியவரும் ஷங்கர் தயாரிப்பில் 'ஆனந்தபுரத்து வீடு' படத்தை இயக்கிக்கொண்டிருப்பவருமான நாகா இந்தத் தொடரை இயக்குகிறார்.
'அமுதசுரபி' பற்றி கேட்டபோது... '' அமுதசுரபி என்பது மணிமேகலை கையில் இருந்த அட்சயபாத்திரம் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. மணிமேகலையிடம் இருந்த அந்த அட்சயபாத்திரம் இப்போது எங்கே இருக்கிறது? இந்தக் காலத்தில் இப்படி ஒரு பாத்திரம் இருக்குமா? என்பதன் தேடல்தான் இந்தத் தொடர். இதை வரலாற்றுப் பின்னணியோடு மாயாஜாலம், அமானுஷ்யம் கலந்து விறுவிறுப்பாகக் கூறுகிறோம். மேலும் தொல்லியல்துறை, கட்டடக்கலை போன்றவற்றைப் பற்றிய பல அரிய குறிப்புகளும் இந்தத் தொடரில் இடம்பெறுகின்றன. மணிமேகலையாக சங்கீதா நடிக்கிறார்'' என்றார் இயக்குநர் நாகா.
இந்தப் புதிய தொடர், ஏப்ரல் மூன்றாம் வாரம் முதல் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.