சினிமா

விகடகவி

தினமணி

"சிந்துசமவெளி', "மைனா' உள்ளிட்ட படங்களுக்கு முன்பே அமலாபால் நடித்த படம் "விகடகவி'. புதுமுகம் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கிருஷ்ணன் என்பவர் இயக்குகிறார். படம் குறித்து அவர் பேசியது, ""கிராமப்புறங்களில் ஆடி மாதம் குழந்தை பிறந்தால் அது வீட்டுக்கு ஆகாது என்பார்கள். ஆடி மாதம் பிறந்த குழந்தைகள் சேட்டைகள் செய்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள் வீட்டில் எல்லோரையும் ஆட்டிப் படைப்பார்கள். யாருக்கும் பயப்படமாட்டார்கள் என்ற வழக்கம் இப்போதும் ஊர்புறங்களில் உண்டு. நகரப்புறங்களில் கூட இந்த நம்பிக்கை உண்டு. அப்படி ஒரு கிராமத்தில் பிறந்த ஐந்து நண்பர்களைப் பற்றிய கதை இது. ஐந்து நண்பர்களால் கிராமத்து மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை காமெடி, காதல் கலந்து சொல்லியிருக்கிறோம். 5 பாத்திரங்களின் பெயர்களான வினோத், கவிதா, டயானா, கருணா, விருமாண்டி ஆகியவற்றின் முதல் எழுத்துகளின் ஆக்கமே "விகடகவி'. அந்த நண்பர்களின் சிறு வயது முதல் 22 வயது வரை கதையாக்கப்பட்டுள்ளது. அமலாபாலுக்கு இதுதான் முதல் படம். இண்டர்நெட்டில் அவர் படத்தைப் பார்த்து விட்டு ஒரே நாளில் அவருக்கு வாய்ப்பு அளித்தேன். முதல் படத்திலேயே அவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்தப் படமும் அவருக்கு நல்லதொரு பெயரை பெற்றுத்தரும். படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.'' என்றார் கிருஷ்ணன்.

ஒளிப்பதிவு - மாபோ ஆனந்த். இசை - ரதன். தயாரிப்பு - சரண்யா சினிமாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT