சினிமா

கஸ்தூரி ராஜா இயக்கும் ‘காசு பணம் துட்டு’

சென்னை குடிசைப் பகுதி மக்களின் யதார்த்த வாழ்க்கை இது. குடிசை பகுதிகளில் வாழும் மக்களை இந்த சமூகம் என்ன மாதிரியான நிலைமையில் வைத்திருக்கிறது.

தினமணி

தனுஷ் நடித்த ‘3’ படத்தைத் தொடர்ந்து ‘ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா தயாரிக்கும் படம் ‘காசு பணம் துட்டு’.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கஸ்தூரி ராஜா இயக்குகிறார். முதலில் படத்திற்கு ‘அசுரகுலம்’ என்று பெயர் வைத்திருந்தனர். பின்னர் அதனை மாற்றி தற்போது ‘காசு பணம் துட்டு’ என பெயர் வைத்திருக்கிறார்கள். மித்ரன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சானியா மற்றும் மும்பையைச் சேர்ந்த சுயோசா சாவந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் படத்தில் பாலா என்ற புதுமுகம் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் வினோத், மினடிஸ், ஆஜித்ராஜா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராக பணியாற்றிய சாஜீத் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படம் குறித்த கஸ்தூரிராஜா கூறியதாவது: "சென்னை குடிசைப் பகுதி மக்களின் யதார்த்த வாழ்க்கை இது. குடிசை பகுதிகளில் வாழும் மக்களை இந்த சமூகம் என்ன மாதிரியான நிலைமையில் வைத்திருக்கிறது. பிறக்கின்ற குழந்தைகள் எதுவும் கிரிமினலாகப் பிறப்பதில்லை சூழ்நிலைதான் அவர்களை கிருமினல்களாக்குகிறது.

இவர்கள் வாழும் வாழ்க்கையில் தவறுகளில்லை ஆனால் தவறுகளே வாழ்க்கையாகிப் போவதுதான் கொடுமை. இவர்களை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், சென்னை நகரத்து பூங்கா புதர்களில், குடிசைகளில் குப்பை புதர்களில், நடைபாதையோரத்து, சந்து பொந்துகளில், ரயில் நிலையங்களின் மறைவிடங்களில், கூவத்தின் கரையோரங்களில் அடங்கிப் போன கவிதைகள்.

மேலும் இதுதான் கதைக்களம். கஸ்தூரிராஜா படமென்றால் இப்படிதான் இருக்கும் என்கிற வரைமுறைகளை இந்த  படத்தின் மூலம் மாற்றிக் காட்ட போகிறாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு அரசின் சிறப்புத் திட்டங்கள்: முழு விவரம்!

தி ஹன்ட்ரட்: கடைசி பந்தில் சிக்ஸர்... வைரலாகும் விடியோ!

துள்ளும் மான்... நைலா உஷா!

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அஸ்தஸ்து? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

1000 பேருக்கு வேலை: மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

SCROLL FOR NEXT