ஊதா கலரு ரிப்பனுடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்
கடந்த ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெரும் வெற்றி பெற்றதுடன், அனைத்து தரப்பு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தில் ஜோடியாக
கடந்த ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெரும் வெற்றி பெற்றதுடன், அனைத்து தரப்பு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தில் ஜோடியாக நடித்த சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா மீண்டும் ஜோடி சேர உள்ளனர்.
எதிர்நீச்சல் படத்திற்கு பிறகு தனுஷ் மீண்டும் தயாரிக்கும் படத்தில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குனர் துரை செந்தில் குமார், சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட கூட்டணி மீண்டும் இணைகிறது.
ஆனால் சிவகார்த்திகேயன் மான் கராத்தே மற்றும் வேறு படங்களில் பிஸியாக உள்ளார், ஸ்ரீதிவ்யாவும் வேறுபடங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.இதனால் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை