முகப்பு
சினிமா

33வது திருமண நாளை கொண்டாடும் ரஜினிக்கு ரசிகர்கள் வாழ்த்து

ஆண்டு தோறும் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 மட்டுமல்லாமல் திருமண நாளான பிப்ரவரி 26-ம் தேதியும் வாழ்த்துச் சொல்ல அவர் வீட்டுக்கு ரசிகர்கள் செல்வது வழக்கம். அவர்களை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:30 AM
பகிர்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 33 வது திருமண நாளை கொண்டாடினார். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்  கடந்த 1981 பிப்ரவரி மாதம் 26ம் தேதி, லதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர்களது இரண்டு மகள்களும் திருமணமாகி திரைப்படத்துறையில் சாதித்து வருகின்றர். ஜஸ்வர்யா 3 படத்தை தனது கணவர் தனுஷை வைத்து இயக்கினார். இது ரசிகர்களிடையே பெரும் வரபேற்பை பெற்றது. இந்நிலையில் சௌந்தர்யா தன் அப்பாவைத்து   கோச்சடையான் படத்தை இயக்கிவருகிறார்.

 இந்நிலையில் ஆண்டு தோறும் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 மட்டுமல்லாமல் திருமண நாளான பிப்ரவரி 26-ம் தேதியும் வாழ்த்துச் சொல்ல அவர் வீட்டுக்கு ரசிகர்கள் செல்வது வழக்கம். அவர்களை வரவேற்று லதா ரஜினிகாந்த்.இனிப்பு வழங்குவார்

இந்த ஆண்டும் ஏராளமான ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள்  ரஜினிக்கும் லதாவுக்கும் மலர்க் கொத்துகள், பரிசுகள் கொடுத்து வாழ்த்துக் கூறி வருகின்றனர். அவர்களை வரவேற்று நன்றி கூறி இனிப்பு வழங்கினார் லதா ரஜினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.