சினிமா

பாபநாசம் படத்தில் சுயம்புலிங்கமாக கமல்!

தினமணி

த்ரிஷயம் படம் சென்ற டிசம்பர் மாதம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ஜீத்து ஜோ‌சப் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருந்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து த்ரிஷ்யம் படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதன் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல் நடிக்க அவருக்கு ஜோடியாக கவுதமி நடிக்கிறார்.

படத்தின் கதை முழுக்க முழுக்க திருநெல்வேலியை மையமாகக் கொண்டு நிகழ்வது போல மாற்றப்பட்டுள்ளது. கிராமத்துப் பின்னணியில் நடக்கும் கதைக்களமான 'பாபநாசம்' படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப் தமிழிலும் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது கேரளாவில் உள்ள தொடுபுழாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

த்ருஷ்யம் படத்தில் மோகன்லால் ஜார்ஜ் குட்டி என்கிற பெயரில் நடித்து இருந்தார். ஆனால் அதன் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன் ஜார்ஜ் குட்டி என்கிற பெயரில் நடிக்கவில்லையாம். அதற்கு பதிலாக சுயம்புலிங்கம் என்கிற பெயரில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் கமல்ஹாசன் நெல்லைத் தமிழ் பேசியும் நடிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT