சினிமா

ஹிந்தியிலும் த்ரிஷ்யம் ஹிட்! ரூ. 50 கோடி வசூல்!

நேற்று கிடைத்த வசூலுடன் சேர்த்து இதுவரை ஒட்டுமொத்தமாக ரூ. 50 கோடி வரை அள்ளியுள்ளது.

எழில்

மற்ற மொழிகளில் ஹிட் ஆனதெல்லாம் சரிதான், ஹிந்தியில் வெற்றி கிடைக்குமா என்கிற சந்தேகத்துடன் சென்ற வாரம் வெளியான த்ரிஷ்யம், முதல் 8 நாள்களில் ரூ. 50 கோடி வசூலைப் பெற்றுள்ளது.

ஜூலை 31 அன்று வெளியான இந்தப் படம் முதல் வீக் எண்டில் மட்டும் (வெள்ளி, சனி, ஞாயிறு) ரூ. 30.03 கோடி வசூல் செய்தது. (வெள்ளி - ரூ. 8.50 கோடி, சனி - ரூ. 9.40 கோடி, ஞாயிறு - ரூ. 12.13 கோடி)

அதன்பிறகும் இதன் வசூலில் தொய்வு ஏற்படவில்லை. திங்கள் - ரூ. 4.05 கோடி, செவ்வாய் - ரூ. 4.50 கோடி, புதன் - ரூ. 4.10 கோடி, வியாழன் - ரூ. 3.60 கோடி என முதல் வாரத்தில் மட்டும் ரூ. 46.28 கோடி வசூல் பெற்றுள்ளது. நேற்று கிடைத்த வசூலுடன் சேர்த்து இதுவரை ஒட்டுமொத்தமாக ரூ. 50 கோடி வரை அள்ளியுள்ளது.

நிஷிகாந்த் காமத் இயக்கிய இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், தபு, ஷ்ரேயா போன்றோர் நடித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT