சினிமா

ரஜினியின் கபாலி தலைப்பு சர்ச்சை: தயாரிப்பாளர் தாணு பதில்!

இல்லாவிட்டால், தலைப்பு ரத்தாகி விடும். பிறகு, ரத்து செய்யப்பட்ட தலைப்புக்கு...

எழில்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே நடிக்கும் படத்துக்கு கபாலி என்று பெயர் வைத்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இப்பிரச்னை குறித்து விரைவில் சுமூக நிலை எட்டப்படும் என படத் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே புதுமுகங்களைக் கொண்டு கபாலி என்றொரு படம் உருவாகி வருவதால் ரஜினியின் கபாலி படத் தலைப்புக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கபாலி என்கிற தலைப்பை முதலில் பதிவு செய்த சிவா பிக்சர்ஸ் தயாரிப்பாளர் சிவக்குமார் பிறகு அதைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டார். இசை வெளியீட்டு விழா வரை நடந்துவிட்டதால் வேறு யார் இந்தத் தலைப்பை பயன்படுத்தப்போகிறார்கள் என்று அவர் நினைத்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

கில்ட், பிலிம் சேம்பர், தயாரிப்பாளர் சங்கம் என மூன்று இடங்களில் ஒரு படத்தின் தலைப்பைப் பதிவு செய்யலாம். ஒரு படத்தின் பெயரை பதிவு செய்ய, ரூ 572 வசூலிக்கப்படுகிறது. முதல் ஆண்டில், ரூ. 572 செலுத்தவேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தி, தலைப்பைப் புதுப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், தலைப்பு ரத்தாகி விடும். பிறகு, ரத்து செய்யப்பட்ட தலைப்புக்கு, முன்பு பதிவு செய்த தயாரிப்பாளர் உரிமை கோர முடியாது. இந்த நிலைமைதான் சிவா பிக்சர்ஸ் தயாரிப்பாளர் சிவக்குமாருக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஜினி படத் தயாரிப்பாளர் வி. தாணு கூறும்போது: நான் தயாரிப்பாளர் சங்கம், கில்ட், பிலிம் சேம்பர் என மூன்றிலும் தலைப்பைப் பதிவு செய்துள்ளேன். இந்தத் தலைப்பில் வேறு யாராவது பதிவு செய்திருக்கிறார்களா என்று பார்த்துதான் முடிவு செய்தோம். இந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT