முகப்பு
சினிமா

ஜீவா படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகல்!

படம் தொடங்க தாமதம் ஆனதால் கீர்த்தி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

Updated On : 29 ஆகஸ்ட், 2015 at 3:35 PM
பகிர்:

'யாமிருக்க பயமே' இயக்குநர் டி.கே இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 'கவலை வேண்டாம்' என்கிற புதிய படம் ஆரம்பமாக இருந்தது. அதில் நடிக்க இருந்த கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக காஜல் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜீவா - கீர்த்தி சுரேஷை வைத்து போட்டோஷுட் எடுக்கப்பட்ட நிலையில் கால்ஷீட் பிரச்னையால் கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளார். படம் தொடங்க தாமதம் ஆனதால் கீர்த்தி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. அந்த வாய்ப்பு இப்போது காஜல் அகர்வாலுக்குச் சென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.