தமிழ் சினிமாவின் நம்பிக்கையான இயக்குநர்களில் பாண்டிராஜூம் ஒருவர். இவருடைய பசங்க படம் தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படங்களுக்கு ஒரு புதிய கதவைத் திறந்தது.
இப்போது இவர் ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்கி வருகிறார். சிம்புவுடன் இது நம்ம ஆளு, சூர்யா தயாரிப்பில் ஹைக்கூ ஆகிய படங்களை இயக்கி வரும் பாண்டிராஜ் அடுத்ததாக விஷாலுடன் இணைந்து ஒரு புதிய படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த மூன்று படங்களும் இந்த வருடம் வெளியாகவுள்ளன. 3 வருடங்களுக்கு ஒரு படம் பண்ணுகிற சில இயக்குநர்களுக்கு மத்தியில் ஒரே வருடத்தில் 3 படங்களை வெளியிட உள்ளது பாண்டிராஜ் மீது அதிக கவனத்தைத் திருப்பியுள்ளது.
இதுபற்றி பாண்டிராஜ் ட்வீட் செய்துள்ளார். அதில், நான் இயக்கிய மூன்று படங்கள் இந்த வருடம் வெளியாகும். சிம்புவுடன் காதல் படம், குழந்தைகள் படமாக ஹைக்கூ, விஷாலுடன் ஆக்ஷன் த்ரில்லர் என மூன்றும் மூன்று விதமானவை. விஷாலுடன் இணையும் படம் டிசம்பரில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.