காஞ்சனா 2: தயாரிப்புச் செலவு 17 கோடி; வசூல் 100 கோடிக்கும் மேல்!
2015-ம் வருடம் முதல்முதலாக 100 கோடி வசூலித்த தமிழ்ப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது...
லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா 2 படம், 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை செய்து வருகிறது. 2015-ல் வேறு எந்தப் படமும் இந்தளவுக்கு வசூல் செய்யவில்லை.
காஞ்சனா 2 படம் 50-வது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. இந்தப் படம் சத்தமில்லாமல் வசூலில் பெரிய சாதனை செய்துள்ளது. இதுவரை 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து 2015-ம் வருடம் முதல்முதலாக 100 கோடி வசூலித்த தமிழ்ப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.
இதுவரை உலகம் முழுக்க தியேட்டர் வசூலாக மட்டுமே ரூ. 108 கோடி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இன்னமும் பல திரையங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ரூ. 17 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் இவ்வளவு தூரம் வசூலித்திருப்பதை ஆச்சர்யமாகப் பார்க்கிறது தமிழ்த் திரையுலகம்.
Advertisement
அடுத்ததாக, காஞ்சனா 3 படக்கதையை உருவாக்கி வருகிறார் லாரன்ஸ்.