சினிமா

ஃபேஸ்புக்கில் ஆபாச கமெண்ட்; தக்க பதிலடி கொடுத்த நடிகை விஷாகா சிங்!

உன் அம்மா, சகோதரி, மனைவிக்கு இருப்பதுபோலத்தான் எனக்கும் உள்ளது...

எழில்

நடிகை விஷாகா சிங் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில், டிஷர்ட் அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் Everybody is somebody’s foreigner  என்கிற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒருவர் மிக மோசமான முறையில் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கமெண்ட் அடித்தார். வழக்கமாக இதுபோன்ற ஆபாசமான கமெண்ட்களை நடிகைகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அல்லது நீக்கிவிடுவார்கள். ஆனால் விஷாகா சிங் ஆபாசமாக கமெண்ட் செய்த நபரை ஒரு பிடி பிடித்தார்.

நான் பெண் என்று எனக்குத் தெரியும். ஒரு பொது அறிவு தெரியுமா, உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, மகள், தோழிகளுக்கு இருப்பதுபோலத்தான் எனக்கும் உள்ளது. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருப்பதுதான். உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, அத்தை, தோழிகளுக்கும் இது பொருந்தும். அவர்களிடம் போய் இப்படி  அசிங்கமாக கமெண்ட் அடிக்க முடியுமா? உனக்காக நான் வருத்தப்படுகிறேன். தைரியம் இருந்தால் என் முன்னால் வந்து சொல். இல்லையென்றால் என்னுடைய பக்கத்தை விட்டு வெளியே செல் என்று பதிலடி கொடுத்தார். 

பிறகு அந்தப் புகைப்படத்தையும் அதனால் உருவான கமெண்ட்கள் அத்தனையும் நீக்கிவிட்டார். தேவையில்லாத எதிர்வினையை உருவாக்கும் என்பதால் அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டேன் என்று பின்னர் விளக்கம் கொடுத்தார். ( இவர், கண்ணா லட்டு திங்க ஆசையா என்கிற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.)

விஷாகா சிங்கின் இந்த நடவடிக்கைக்கு திரைத்துறையினர் பலத்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.  ‘இத்தகைய கோழைகளை எதிர்கொண்ட விதம் அபாரம். பெண்களின் சக்தியையே இது காட்டுகிறது’ என்று நடிகை த்ரிஷா, விஷாகா சிங்கைப் பாராட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT