சினிமா

ரஜினி - ரஞ்சித் படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், ‘மெட்ராஸ்’ கலையரசனுக்கு வாய்ப்பு?

தன்னுடைய இரண்டு படங்களிலும் முத்திரை பதித்த நடிகர்களுக்கு ரஜினி படத்திலும் ஒரு வாய்ப்பு வழங்கவேண்டும் என்கிற ரஞ்சித்தின் ஆசை...

எழில்

மெட்ராஸ் படத்தில் தன்னுடைய அசத்தலான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர் கலையரசன்.

ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் கலையரசன் நடிக்க உள்ளார். மெட்ராஸ் போல இந்தப் படத்திலும் கலையரசனுக்கு நல்ல வேடம் கிடைத்துள்ளது. மெட்ராஸ் படத்தைப் பார்த்த ரஜினி, தனது படத்திலும் கலையரசன் நடிக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். ரஞ்சித்துக்கும், கலையரசன் தனது அடுத்தப் படத்தில் நடிக்கவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. கூடவே ரஜினியும் விருப்பப்பட்டதால் கலையரசனுக்குச் சுலபமாக இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

அட்டகத்தி தினேஷும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தன்னுடைய இரண்டு படங்களிலும் முத்திரை பதித்த நடிகர்களுக்கு ரஜினி படத்திலும் ஒரு வாய்ப்பு வழங்கவேண்டும் என்கிற ரஞ்சித்தின் ஆசை நிறைவேறியுள்ளதாகவே தெரிகிறது.

ரஜினி - ரஞ்சித் இணையும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT