சினிமா

சாதாரண குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்தேன்: விஷால்

படிப்படியாக படித்துதான் லயோலா கல்லூரியில் சேர்ந்தேன். கஷ்டப்பட்டுத்தான் சினிமாவில் நடித்து முன்னேறியுள்ளேன்.

எழில்

நடிகர் விஷால் நேற்று மதுரவாயல் அரசுமேல்நிலைப் பள்ளிக்கு சென்று மாணவர்களைச் சந்தித்து பரிசுகள் கொடுத்து பாராட்டி ஊக்கப்படுத்தினார்.

அதன்படி அந்தப் பள்ளியில் பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பத்தாம் வகுப்பில் 400க்கு மேல் எடுத்த மாணவர்கள் 40 பேருக்கும் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

மாணவர்களிடையே விஷால் பேசும் போது ‘நான் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்தான். நானும் உங்களைப் போல அரசுப் பள்ளியில் படித்தவன்தான். படிப்படியாக படித்துதான் லயோலா கல்லூரியில் சேர்ந்தேன். பிறகு கஷ்டப்பட்டுத்தான் சினிமாவில் நடித்து முன்னேறியுள்ளேன்.

உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைத்துத் தர கல்வியால் மட்டுமே முடியும். கல்வி ஒன்றுதான் நம்மை உயர்த்தும்.நன்றாக படியுங்கள். முன்னேறலாம்.  இந்தப் பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டுகிறேன். அனைவரும் அதிக மதிப்பெண் எடுக்க முயல வேண்டும். என்னால் வளர முடிகிற போது உங்களாலும் முடியும்.உங்களை நீங்கள் நம்புங்கள்.' என்று ஊக்கமூட்டும் வகையில் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT