சினிமா

சென்னையில், சினேகாவுக்கு வளைகாப்பு நடந்தது!

நிகழ்ச்சியில் பிரசன்னா - சினேகாவின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டார்கள்.

எழில்

நடிகை சினேகா 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். அவருக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வளைகாப்பு நடந்தது.

பிரசன்னா – சினேகா ஆகிய இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர் சம்மதத்துடன் 2012 மே 11 அன்று திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில், சினேகா கர்ப்பமாக இருப்பதை தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று பிரசன்னா அறிவித்தார்.

சமீபத்தில் சினேகாவுக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வளைகாப்பு நடந்தது. வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரசன்னா - சினேகாவின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டார்கள்.

குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததால் பலரை அழைக்கமுடியவில்லை. அனைவரும் சினேகா மற்றும் குழந்தையை நிச்சயம் வாழ்த்துவீர்கள் என நம்புகிறேன் என்று ட்வீட் செய்தார் பிரசன்னா. சினேகாவுக்கு ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT