சினிமா

புலி பட டீஸர் இணையத்தில் வெளியான விவகாரம்: ஒருவர் கைது!

ஃபோர் ஃபிரேம்ஸ் ஸ்டூடியோவில், பயிற்சி உதவியாளராக இன்டர்ன்ஷிப்பில் பணியாற்றிய, கேரளாவைச் சேர்ந்த...

எழில்

நடிகர் விஜய் பிறந்த நாளான இன்று, அவர் நடித்த புலி திரைப்படத்தின் டீசர் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு டீசர் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஞாயிறு காலையிலேயே படத்தின் டீசர் இணையத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த டீசர் வெளியானதால் புலி பட டீசர் நேற்று மதியமே அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

இதனையடுத்து புலி படக்குழுவினர், நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள். விசாரணை நடத்தியதில், சென்னை ஃபோர் ஃபிரேம்ஸ் ஸ்டூடியோவில், பயிற்சி உதவியாளராக இன்டர்ன்ஷிப்பில் பணியாற்றிய, கேரளாவைச் சேர்ந்த மிதுன், தன்னுடைய மொபைலில் டீசரைப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மிதுனை காவல்துறை கைது செய்தது.

இது தொடர்பாக ஃபோர் ஃபிரேம்ஸ் நிறுவனம் காவல்துறைக்கு அளித்த புகார் கடிதம்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT