முகப்பு
சினிமா

நஸ்ரியாவுடன் ஜோடியா? போலி ட்விட்டர் ஐடி குறித்து ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை!

நான் ஃபேஸ்புக், ட்விட்டர் எதையும் உபயோகப்படுத்தவில்லை. மேற்கொண்டு இது மாதிரி தொடருமானால்...

Updated On : 23 ஜூன், 2015 at 1:04 PM
பகிர்:

எனது பெயரில் போலியாக சமூகவலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கப்பட்டு பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இது தொடருமானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:                            

எனது பெயரில் ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் எதுவும் கிடையாது. எனவே அது மாதிரி எந்தச் செய்தி வந்தாலும் நம்பாதீர்கள். அடுத்து எனது படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்கிறார் என்று நானே ட்விட் செய்த மாதிரி நேற்று சோஷியல் மீடியாவில் செய்தி பரப்பப்பட்டது. எனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

Advertisement

நான் ஃபேஸ்புக், ட்விட்டர் எதையும் உபயோகப்படுத்தவில்லை. மேற்கொண்டு இது மாதிரி தொடருமானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாரன்ஸ் எச்சரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.