மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!
மேற்கு வங்கத்தின் முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குகள் பதிவாகியுள்ளது குறித்து...
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் 91.78 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) அன்று நடைபெற்றது. இதையடுத்து, 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப். 29 அன்று நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் இன்று காலை முதல் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 91.78 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இத்துடன், மேற்கு வங்கத்தில் 1.84 கோடி (90.92%) ஆண் வாக்காளர்கள், 1.76 கோடி (92.69%) பெண் வாக்காளர்கள் மற்றும் 465 (56.79%) மூன்றாம் பாலினத்தவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 91 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது வரலாற்றில் இதுவே முதல்முறை. இறுதியாக, கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 84.72 சதவிகித வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
A voter turnout of 91.78 percent was recorded in the first phase of the Assembly elections held in West Bengal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.