மமதா பானர்ஜியின் மருமகள் தற்கொலை
மமதா பானர்ஜியின் மருமகள் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளது குறித்து...
மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜியின் மருமகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பீர்பும் பகுதியில் உள்ள தனது வீட்டின் மாடி அறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜியின் தாய்வழியிலான சகோதரரின் மகள் பிரிஷ்டி முகர்ஜி (31). இவர் மேற்கு வங்கத்தின் பீர்பும் மாவட்டத்திற்குட்பட்ட குசும்பா கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். எனினும் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார்.
மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பிரிஷ்டி முகர்ஜி தனது வேலையை இழந்திருந்தார்.
இதனிடையே தனது வீட்டின் இரண்டாவது மாடி அறையில் தூக்கில் தொங்கியபடி இன்று சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து விரைந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
west bengal Mamata Banerjee's daughter-in-law commits suicide
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.