சினிமா

‘டைட்டானிக்’ இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் மரணம்

டைட்டானிக் படம் இவர் புகழை உலகம் முழுக்க பரவச் செய்தது. இந்தப் படத்தின் இசைக்காக 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார்.

எழில்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர், தெற்கு கலிபோர்னியாவில் நடந்த விமான விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 61.

விமானியாகப் பயிற்சி பெற்றுள்ள ஹார்னர், கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பரா அருகே திங்கள்கிழமை காலை தனது சொந்த விமானத்தில், பயணம் செய்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. ஹார்னர் பலியானது உறுதி செய்யப்பட்டதாக அவரது உதவியாளர் சில்வியா பாட்ரிக்ஜா ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

1953-ம் வருடம் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தவர் ஹார்னர். லண்டனில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் மியூசிக்கில் இசை பயின்றார். 1970களின் இறுதியில் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார். 1982-ல் வெளியான ஸ்டார் டிரெக் 2 இவருக்கு நல்ல பெயரை அளித்தது. ஏலியன்ஸ், பிரேவ் ஹார்ட், அப்போலோ 13, ஏ பியூடிஃபுல் மைண்ட், அவதார் போன்ற படங்களுக்கு மகத்தான இசையை அளித்தார். டைட்டானிக் படத்தால் இவர் உலகப் புகழ் பெற்றார். அந்தப் படத்தின் இசைக்காக 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT