கேரளாவின் ஆயுர்வேத மருத்துவ விளம்பரத் தூதராக முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று அமைச்சரவை கூடியபோது இம்முடிவு எடுக்கப்பட்டதாக கேரள முதலமைச்சர் ஓமன் சாண்டி தகவல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஸ்டெபி கிராப்பிடம் பேசி ஒப்பந்தம் செய்ய கேரள சுற்றுலாத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாத் துறையின் விசிட் கேரளா என்கிற திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கும். இந்தத் திட்டம் தொடர்பாக, கேரள சுற்றுலாத்துறை ஸ்டெபி கிராப்பிடம் முன்பே பேசி, சம்மதம் பெற்றுள்ளது.
22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்டெபி கிராப், 1999-ம் வருடம் டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.