முகப்பு
சினிமா

நடிகை கீர்த்தி சுரேஷை மணி ரத்னம் தேர்வு செய்தது ஏன்?

தமிழ் தெரிந்த நடிகைதான் பொருத்தமாக இருப்பார் என மணி ரத்னம் முடிவு செய்தார்.

Updated On : 10 செப்டம்பர், 2015 at 2:17 PM
பகிர்:

மணி ரத்னத்தின் புதிய படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடிக்கிறார்கள். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஆரம்பமாகிறது.

ஓ காதல் கண்மணி படத்தில் லைவ் சவுண்ட் என்கிற சிங்க் சவுண்ட் (Sync Sound) முறையைப் பயன்படுத்தினார் மணி ரத்னம். அது சிறப்பாக வந்ததால் அடுத்தப் படத்திலும் சிங்க் சவுண்டைப் பயன்படுத்த உள்ளார்.

‘இதனால் தமிழ் தெரிந்த நடிகைதான் பொருத்தமாக இருப்பார் என மணி ரத்னம் முடிவு செய்தார். நடிகை கீர்த்தி சுரேஷ் நன்றாகத் தமிழ் பேசுபவர் என்பதால் அவருக்கு அந்த வாய்ப்பு சுலபமாகக் கிடைத்தது. இரண்டாவது ஹீரோயினுக்காக தேர்வு நடைபெற்று வருகிறது’ என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.