பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி.க்களான ராகவ் சத்தா உள்பட 3 எம்பிக்கள் பாஜகவில் இணைந்தனர்.
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி.க்களான ராகவ் சத்தா உள்பட 3 எம்பிக்கள் பாஜகவில் இணைந்தனர்.
தலைநகர் தில்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் முன்னிலையில் இணைந்த ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல் ஆகிய 3 பேருக்கு பூங்கொத்து கொடுத்தும் இனிப்பு ஊட்டியும் வரவேற்றார்.
அவர்களைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால் உள்ளிட்ட மேலும் 4 ஆம் ஆத்மி எம்.பி.க்களும் பாஜகவில் விரைவில் இணைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
முன்னதாக, இன்று தில்லியில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான ராகவ் சத்தாவும், சந்தீப் பதக்கும் தாங்கள் பாஜகவில் இணைவதாக அறிவித்தனர்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் கட்சியை விட்டு விலகி, ஒரு தனிப் பிரிவாக பாஜகவில் இணைவார்கள் என்றும் சத்தா கூறினார்.
கட்சியை விட்டு விலகிய ஏழு பேரில் சுவாதி மாலிவாலும், ஹர்பஜன் சிங்கும் அடங்குவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Rajya Sabha MPs Raghav Chadha, Sandeep Pathak and Ashok Mittal join BJP in the presence of BJP National President Nitin Nabin at the party headquarters
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.