உண்ணாவிரதத்தைக் கைவிடுக.. ஜூலை 16ல் சோனம் வாங்சுக்கை சந்திக்கிறார் கேஜரிவால்!
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டுக்கு ஆதரவாக வாங்சுக்குடன் கேஜரிவால் பங்கேற்பது பற்றி..
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டித்து தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் சார்பில் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாகவே கசிந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாட்டின் பல பகுதிகளில் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தில்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்தப் போராட்டத்தில், லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28 தொடங்கி இன்று வரை 17 வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சி நடத்திவரும் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் தனது ஆதரவைத் தெரிவித்தார். மேலும், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த கேஜரிவால் பேசுகையில், வாங்சுக் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு ஜந்தர் மந்தருக்குச் செல்லவிருப்பதாகக் கூறினார்.
காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்-கின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அவர் நாட்டின் சொத்து, எனவே, உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேறு வழிகளும் உள்ளன. சிஜேபியின் போராட்டத்தையும் அதன் கோரிக்கைகளையும் ஆம் ஆத்மி கட்சி ஆதரிக்கிறது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்கவும், எதிர்காலத்தில் மாணவர்கள் சந்திக்கும் சிக்கல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
AAP chief Arvind Kejriwal on Tuesday extended his party's support to the ongoing protest by Cockroach Janta Party (CJP) at Jantar Mantar here, and urged climate activist Sonam Wangchuk to end his indefinite hunger strike.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.