FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியின் ஒரு பகுதி அல்ல! சஞ்சய் சிங்

இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இல்லை என்பதைப் பற்றி...

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் - படம் - பிடிஐ
பகிர்:

தில்லியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் எம்பி சஞ்சய் சிங் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சஞ்சய் சிங் மேலும் கூறியதாவது,

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞனேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை தங்கள் கட்சி ஆதரிப்பதாகவும், தேர்தல் ஆணையத்தின் குறைபாடுகள் என்று தாங்கள் கருதுபவற்றுக்கு எதிரான வீதி முதல் நாடாளுமன்றம் வரை போராடி வருவதாகவும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement

2024 மக்களவைத் தேர்தலுக்காகவே இந்தியா கூட்டணி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. கடந்த 2025 ஜூலை 18 அன்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி வெளியேறுவதாக அறிவித்திருந்தார். கூட்டத்தில் கலந்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. ஆம் ஆத்மி கட்சி 'இந்தியா' கூட்டணியின் ஒரு பகுதியாக இல்லை.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்க இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூட்டம் கூடியுள்ளது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனை உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பிய சிங், நாடு முழுவதும் 13.37 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments