FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வாங்சுக் போராட்டத்தில் இணைய மக்களுக்கு ஆம் ஆத்மி அழைப்பு!

நீட் தேர்வில் முறைகேடு போராட்டத்தில் பங்கேற்குமாறு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது பற்றி.. வாங்சுக் போராட்டத்தில் இணைய மக்களுக்கு ஆம் ஆத்மி அழைப்பு

Updated On : 15 ஜூலை 2026, 4:03 pm IST
சஞ்வீவ் ஜா
பகிர்:

நீட் தேர்வில் முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்குமாறு ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சஞ்வீவ் ஜா மக்களை வலியுறுத்தியுள்ளார்.

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28 தொடங்கி இன்று வரை 17-வது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வாங்சுக்கின் போராட்டத்துக்கு திரிணமூல் உள்பட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் கரப்பான்பூச்சி மக்கள் கட்சிக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், ஜூலை 16-ல் வாங்சு உண்ணாவிரதம் மேற்கொள்ளும் தில்லி ஜந்தர் மந்தருக்குச் சென்று அவரை சந்தித்துப் பேச உள்ளார்.

Advertisement

Advertisement

நாட்டின் இளைஞர்களுக்கு வெளிப்படையான தேர்வு முறையையும் வேலைவாய்ப்புகளையும் உறுதி செய்வதையே இந்தப் போராட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஜா கூறினார்.

இதுதொடர்பாக சஞ்வீவ் ஜாவின் எக்ஸ் பதிவில்,

வாங்சுக் 17 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும், அவர் தனிப்பட்ட நலனுக்காக அல்லாமல் இளைஞர்களின் எதிர்காலம், தேர்வு முறையில் சீர்திருத்தங்களைக் கோரியே போராடி வருகிறார்.

லடாக்கில் நீர் பாதுகாப்பு, மலைப்பகுதிகளின் நிலையான மேம்பாடு போன்ற துறைகளில் சமூகத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர் வாங்சுக், நீண்ட கால உண்ணாவிரதத்தால் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன்பு வாங்சுக்கைச் சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு ஆம் ஆத்மி சார்பில் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் நாட்டின் இளைஞர்களின் கவலைகளுக்குத் தீர்வு காணும் வரை போராட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்ச்சியாகத் தேர்வு வினாத்தாள்கள் கசிவதால் தகுதியான விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடுகிறது. இப்பிரச்சனை நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை நேரடியாகப் பாதிக்கிறது.

வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவிக்க கேஜரிவால் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு ஜந்தர் மந்தருக்கு வருவார், தில்லி மற்றும் நாடு முழுவதிலுமிருந்து மக்கள் போராட்டக் களத்தில் ஒன்றுகூடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

போராட்டக்காரர்கள் எழுப்பும் கவலைகளை அரசு புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், நியாயமான தேர்வு முறை உறுதி செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.

தேர்வுகளைச் சரியாக நடத்தத் தவறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

AAP national convener Arvind Kejriwal will meet activist Sonam Wangchuk at Jantar Mantar on Thursday, party MLA Sanjeev Jha said on Wednesday and urged people to join the ongoing protest against alleged exam irregularities.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments