மனைவிக்கு ரூ. 19 கோடி ஜீவனாம்சம் தருவது ஏன்? நடிகர் சுதீப் பதில்
விவாகரத்தால் எனக்கும் என் மகளுக்கும் உள்ள பிணைப்பில் எந்த மாற்றமும் இல்லை.
விவாகரத்தால் எனக்கும் என் மகளுக்கும் உள்ள பிணைப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்று நடிகர் சுதீப் கூறியுள்ளார்.
2001-ல் கேரளாவைச் சேர்ந்த பிரியா ராதாகிருஷ்ணனைத் திருமணம் செய்தார் சுதீப். இப்போது இருவரும் தங்களது திருமண வாழ்வை முறித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்கள். இதனையடுத்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவாகரத்துக்கு ஈடாக ரூ. 19 கோடி ஜீவனாம்சம் கொடுக்கவும் தனது மகள் சான்வி பிரியாவின் பாதுகாப்பில் வளரவும் சுதீப் சம்மதித்துள்ளார்.
இதுகுறித்து சுதீப் ஒரு பேட்டியில் கூறியதாவது: ‘விவாகரத்தால் எனக்கும் என் மகளுக்கும் உள்ள பிணைப்பில் எந்த மாற்றமும் இல்லை. சான்வி என் ஒரே மகள். அவள் தான் எனக்கு முக்கியம். அவளுக்காக நான் எப்போதும் இருப்பேன்.’ என்றார்.
Advertisement
ரூ. 19 கோடி ஜீவனாம்சம் தருவது தொடர்பான செய்திகள் பற்றி கேட்டதற்கு ‘இதை, என் மகள் மற்றும் மனைவிக்காக செய்கிறேன்’ என்று பதிலளித்துள்ளார் சுதீப்.