முகப்பு
சினிமா

புலி படத்துக்கு யூ சான்றிதழ்! வரிவிலக்கு கிடைக்குமா?

புலி படத்துக்கு வரிவிலக்கு கிடைப்பது தொடர்பாக இணையத்தில் பலரும் பேசிவருகிறார்கள். இதனால் புலி படத்தின் வரிவிலக்கு தொடர்பான முடிவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள்.

Updated On : 16 செப்டம்பர், 2015 at 12:04 PM
பகிர்:

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள படம் - புலி. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்துக்குத் தணிக்கை அதிகாரிகள் யூ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். சில காட்சிகள் மட்டுமே யூ சான்றிதழுக்காக வெட்டப்பட்டுள்ளன.

படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக தணிக்கைக் குழு அதிகாரிகள் பாராட்டியுள்ளார்கள். மேலும், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நல்ல பொழுதுபோக்குப் படம் என்று பாராட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

யூ சான்றிதழ் பெற்றுள்ளதால் புலி படம் தமிழக அரசின் வரிவிலக்குக்குத் தகுதி பெற்றுள்ளது. படத்தை தமிழக அரசின் குழு ஒன்று பார்வையிட்டு முடிவு எடுக்கும். இப்போது பலருடைய கேள்வி இந்தப் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்குமா என்பதுதான். புலி படத்துக்கு வரிவிலக்கு கிடைப்பது தொடர்பாக இணையத்தில் பலரும் பேசிவருகிறார்கள். இதனால் புலி படத்தின் வரிவிலக்கு தொடர்பான முடிவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள். இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி வாங்கியுள்ளது.

Advertisement

புலி அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.