சினிமா

கன்னடத்தில் படம் இயக்கியுள்ளார் இயக்குநர் கதிர்! ஏ.ஆர். ரஹ்மான், பிரபுதேவா வாழ்த்து!

2002ல் வெளிவந்த காதல் வைரஸ் படத்துக்குப் பிறகு வேறு எந்தப் படத்தையும் இயக்கவில்லை. புதிய முயற்சியாக அவர் கன்னடத்தில் காதல் படம் ஒன்றை இயக்கியுள்ளார். அந்தப் படம் வருகிற வெள்ளிக்கிழமையன்று வெளியாக உள்ளது.

எழில்

இயக்குநர் கதிர், 90களில் விதவிதமான காதல் படங்களால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தவர். ஆனால் 2002ல் வெளிவந்த காதல் வைரஸ் படத்துக்குப் பிறகு அவர் வேறு எந்தப் படத்தையும் இயக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, புதிய முயற்சியாக அவர் கன்னடத்தில் காதல் படம் ஒன்றை இயக்கியுள்ளார். அந்தப் படம் வருகிற வெள்ளிக்கிழமையன்று வெளியாக உள்ளது.

நான் லவ்டிராக் என்கிற இந்தப் படத்தில் ரக்‌ஷித் கெளடா, நிதி குஷாலப்பா போன்றோர் நடித்துள்ளார்கள்.

நான் லவ்டிராக் படத்தை முதலில் தமிழில் எடுக்கவே கதிர் முடிவெடுத்திருந்தார். ஆனால் ரக்‌ஷித்தின் முயற்சியால் கன்னடப் படம் எடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். கதாநாயகியான நிதியையும் தமிழ்ப் படத்தில் நடிக்க வைக்கவே தேர்வு செய்தார். ஆனால் கன்னடப் பட வாய்ப்பு வந்ததால் அதில் நிதியை நடிக்க வைத்துள்ளார். இந்தப் படத்துக்கு பிரவீன் - ஷியாம் பிரசன்னா இசையமைத்துள்ளார்கள்.

முதல்முறையாக ஒரு கன்னடப் படம் இயக்கியுள்ளதால் படப்பிடிப்பு முடிந்தபிறகும் சில மாற்றங்களைச் செய்துள்ளார் கதிர். படம் ரிலீஸுக்கு முன்பு கன்னடத்தில் வெளியான மற்ற படங்களைப் பார்த்த கதிர், தன்னுடைய கதைக்கு மக்கள் இன்னும் சில விஷயங்களை எதிர்பார்ப்பார்கள் என்றெண்ணினார். நண்பர்கள் தொடர்புடைய சில காட்சிகளைப் பிறகு கூடுதலாக இணைத்துள்ளார். இதனால் முதலில் காதல் படமாக மட்டும் இருந்த நான் லவ்டிராக் தற்போது காதல், நட்பு என இரண்டின் அருமையையும் வெளிப்படுத்தும் படமாக அமைந்துள்ளதாக ஹீரோ ரக்‌ஷித் கூறியுள்ளார்.

நான் லவ்டிராக், இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இதற்காக இசையமைப்பாளர் ரஹ்மான், இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா ஆகியோர் கதிருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கதிரின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான், தன்னுடைய திரையிசை வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை உண்டு பண்ணியவர் கதிர். கன்னட ரசிகர்கள், அவருடைய காதல் படங்களை மிகவும் ரசிப்பார்கள். புதிய முகங்களை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துகள் என்று கதிரைப் பாராட்டியுள்ளார் ரஹ்மான். அதேபோல பிரபுதேவாவும், கதிரின் படங்களை இளைஞர்கள் மிகவும் விரும்புவார்கள் என்று வாழ்த்தியுள்ளார்.

லவ் டிராக் - Hrudayaane வீடியோ பாடல்

</p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT