சினிமா

கபாலி: உலகளவிலும் இந்தியாவிலும் FDFS எப்போது?

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி. பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) வெளியாகிறது. தமிழ் தவிர மலாய் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எழில்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி. பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படம் நாளை (ஜூலை 22) வெளியாகிறது. தமிழ் தவிர மலாய் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கபாலி படத்தின் உலகளவிலான முதல் காட்சி (FDFS) மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. இவ்விரு நாடுகளிலும் இரவு 7.30 மணிக்கு (இந்திய நேரம் மாலை 5 மணி) கபாலியின் முதல் காட்சி நடைபெற உள்ளது.

கபாலி படத்தின் பிரீமியர் என்கிற சிறப்புக் காட்சி பாரிஸில் உள்ள ரெக்ஸ் சினிமாஸில் இரவு 8.30 மணி அளவில் இன்று திரையிடப்படவுள்ளது. பாரிஸில் உள்ள இந்தத் திரையரங்கம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அரங்கம் ஆகும். ஒரே சமயத்தில் 2800 அமர்ந்து படம் பார்க்கமுடியும்.

இந்தியாவில் முதல் காட்சி எப்போது? கபாலி படத்தின் முதல் காட்சி சென்னை காசி திரையரங்கில் அதிகாலை 1 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. சென்னையின் புறநகர் திரையரங்குகளில் காலை 4 மணிக்குப் பிறகு முதல் காட்சி தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT