மிஸ்கின் இயக்கத்தில் உருவாக உள்ள துப்பறிவாளன் திரைப்படத்தில், நடிகர் விஷால் துப்பறியும் நிபுணர் கதாபாத்திரத்தை ஏற்க உள்ளார்.
த்ரில்லர் படமாக உருவாக உள்ள துப்பறிவாளன் படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது.
அதில், துப்பறியும் நிபுணர் வேடத்தில் விஷால் நடிக்கவிருக்கிறார். மிஸ்கினின் த்ரில்லர் பட வரிசையில் துப்பறிவாளனும் இடம்பெற உள்ளது. நிச்சயம் இது விஷால் ரசிகர்களுக்கும், த்ரில்லர் பட பிரியர்களுக்கும் சிறந்த விருந்தாக அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்க உள்ளன. கதாநாயகன் மட்டுமே உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், துப்பறிவாளனில், விஷாலுடன் ஜோடி சேர உள்ள கதாநாயகி இன்னும் உறுதியாகவில்லை.
விஷால் பில்ம் பேக்டரி தயாரிப்பு நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்க உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.