சினிமா

கேரளா 3 தமிழ்நாடு 2: சூப்பர் சிங்கர் இறுதிச்சுற்றில் ஜெயிக்கப் போகிறவர் யார்?

இந்தமுறை இறுதிச்சுற்றில் போட்டியிடும் 5 பேரில் மூன்று பேர் கேரளாவைச்சேர்ந்தவர்கள் என்பதால் இறுதியில் வெல்லப்போவது தமிழ்நாடா, கேரளாவாஎன்கிற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

எழில்

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று, சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று சென்னையில் இன்று நடைபெற உள்ளது.

சூப்பர் சிங்கர் 5-ன் இறுதிச்சுற்றில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த், லட்சுமி என ஐந்து பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் பரீதாவும் ராஜகணபதியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனந்த், சியாத், லட்சுமி ஆகியோர் கேரளா.

தமிழகத்தின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்கிற அடைமொழியுடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் பாடகர்கள் கலந்துகொள்வார்கள். அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் ஆர்வத்துடன் இப்போட்டியில் பங்கேற்பார்கள்.

இந்தமுறை இறுதிச்சுற்றில் போட்டியிடும் 5 பேரில் மூன்று பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். எனவே எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் போட்டியை வெல்லப் போகிறார் என்கிற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களிலும் சூப்பர் சிங்கரின் இறுதிச்சுற்று பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பரீதா, ஆனந்த், சியாத் ஆகிய போட்டியாளர்களுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி, சென்னை டி.பி. ஜெயின் கல்லூரியில் 6 மணி முதல் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி முடிய எப்படியும் இரவு 12 மணி வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ரூ. 500, ரூ. 1500, ரூ. 3000 என்கிற விதத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. நிகழ்ச்சி, விஜய் டிவியில் நேரலையாக ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்த் திரையிசை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள்.

சூப்பர் சிங்கர் இறுதிச் சுற்றுக்கு ஆன்லைனில்  வாக்களிக்க: http://www.supersinger.in/

சூப்பர் சிங்கர் வெற்றியாளர்கள்:

சூப்பர் சிங்கர் 1

நிகில் மேத்யூ (கேரளா)

சூப்பர் சிங்கர் 2

அஜீஸ் (தமிழ்நாடு)

சூப்பர் சிங்கர் 3

சாய் சரண் (தமிழ்நாடு)

சூப்பர் சிங்கர் 4

திவாகர் (தமிழ்நாடு)

சூப்பர் சிங்கர் 5

            ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT