சினிமா

63-வது தேசிய திரைப்பட விருதுகள்: தமிழ் சினிமாவுக்கு எத்தனை விருதுகள்?

63-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் சினிமாவுக்கு மொத்தம் 5 விருதுகள் கிடைத்துள்ளன.

சநகன்

63-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் சினிமாவுக்கு மொத்தம் 5 விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த பின்னணி இசைக்கான விருது, தாரை தப்பட்டை படத்துக்காக இளையராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விசாரணை படம் 3 தேசிய விருதுகளைத் தட்டியுள்ளது. சிறந்த தமிழ்ப் படம், சிறந்த துணை நடிகருக்கான விருது (சமுத்திரக்கனி), சிறந்த படத்தொகுப்பு (கிஷோர்).

இறுதிச்சுற்று படத்துக்காக நடிகை ரித்திகா சிங்குக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது.

சென்ற வருடம்

சென்ற வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் தமிழ் சினிமாவுக்குக் குறைவான விருதுகளே கிடைத்துள்ளன.

சென்ற வருடம், சிறந்த குழந்தை நட்சத்திர விருதுக்கு "காக்கா முட்டை' தமிழ் திரைப்படத்தில் நடித்த விக்னேஷ், ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படங்களாக "காக்கா முட்டை', மராத்தியில் வெளியான "எலிசபெத் ஏகாதெசி' ஆகிய படங்கள் தேர்வாகின.

சிறந்த பாடலாசிரியராக நா.முத்துகுமாரும் (சைவம்), சிறந்த பின்னணிப் பாடகியாக உத்தாரா உன்னிகிருஷ்ணனும் (சைவம்), தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சிறந்த படத்தொகுப்பாளர் விருது விவேக் ஹர்ஷனுக்கு (ஜிகர்தண்டா) கிடைத்தது.

பிராந்திய மொழி படங்கள் வரிசையில் சிறந்த தமிழ் திரைப்படமாக குற்றம் கடிதல் தேர்வானது.

திரைப்படம் சார்ந்த சிறந்த புத்தகத்துக்கான தேசிய விருது, படத் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான தனஞ்செயன் எழுதிய ப்ரைடு ஆஃப் தமிழ் சினிமா புத்தகத்துக்கு கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT